டிரெண்டிங்

செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வர்

செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வர்

webteam

390 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துமவனையில் நடந்த நிகழ்ச்சியில், செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் வழங்கினார். அதேபோல், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். காலதாமதமில்லாத நவீன அவசர சிகிச்சை பிரிவினையும் அவர் திறந்து வைத்தார். அதேபோன்று, சென்னை மாநகராட்சிக்குப் பள்ளி சிறார் திட்டத்தின் கீழ், 15 நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களின் சேவையையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில்தான் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதாகக் கூறினார். உலக அளவில் உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் பாராட்டுகளை பெற்றிருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.