டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பரப்புரை செய்யாதது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பரப்புரை செய்யாதது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

JustinDurai

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி பரப்புரையில் ஈடுபடாதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.  

திமுகவின் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் மகன் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேரடி பரப்புரையில் ஈடுபடாதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். ''காணொளி மூலமாக பரப்புரை செய்தது குறித்து சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

கொரோனா தடுப்பு விதிகள் அமலில் இருந்ததாலேயே காணொளி மூலமாக பரப்புரை செய்தேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்லில் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். தேர்தல் முடிவுக்கு பிறகு மாவட்டங்களில் நடைபெறவுள்ள வெற்றி விழாவில் பங்கேற்க வருவேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள் - தொகுப்பு