டிரெண்டிங்

சென்னை Vs லக்னோ: ஆடும் லெவனில் யார் யார் இடம் பெறுவார்கள்..?

சென்னை Vs லக்னோ: ஆடும் லெவனில் யார் யார் இடம் பெறுவார்கள்..?

webteam

 முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி, அதே நிலையில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது. பிளேயிங் 11இல் யார் யார் இடம்பெற வாய்ப்பு?

ஐபிஎல் 2022 இன் 7வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளிலும் யார் யார் களமிறங்க வாய்ப்பு என்பதைப் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் 11:

1. ருத்ராஜ் கெய்க்வாட்: கடந்த சீசனின் ஆரஞ்சு கேப் வின்னர். 25 வயதான நம்பிக்கைக்குரிய பேட்டரிடமிருந்து ஒரு உற்சாகமான மறுபிரவேசத்தை எதிர்பார்க்கலாம்.

2. டெவோன் கான்வே: நியூசிலாந்து பேட்டர் கடந்த ஆட்டத்தில் சொதப்பிய போதும் இன்னும் ஒரு முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

3. ராபின் உத்தப்பா: 36 வயதான போதும் ரன் குவிக்கும் உத்வேகத்துடன் இருப்பவர். சென்ற ஆட்டத்தை போல சிறப்பான ரன்குவிப்பை இந்த ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.

4. அம்பதி ராயுடு: கடந்த ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கேப்டன் ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார். ஆனால் உத்தப்பாவைப் போலவே ராயுடுவும் விரைவில் சில ரன்களை எடுக்க ஆர்வமாக இருப்பார்.

5. ரவீந்திர ஜடேஜா (கேப்டன்): கடந்த ஆட்டத்தில் ஜடேஜாவின் ஸ்டிரைக் ரேட் (92) சற்று மோசமாக இருந்தது. ஆனால் அவர் பேட்டிங் செய்ய வந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. டாப் ஆர்டர் இன்னும் கொஞ்சம் ஆதரவு அளித்து ரன்குவித்தால் தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்

6. எம்எஸ் தோனி (WK):3 ஆண்டுகளுக்கு பிறகு அரைசதம் விளாசிய அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்க்கலாம்.

7. ஷிவம் துபே: தோனி சீக்கிரமே களமிரங்கினால் இவர்தான் ஃபினிஷர். தனது பங்களிப்பை சரியாக இந்த முறை அளிப்பார் என்பதால் இன்றைய ஆடும் லெவனிலும் இவர் இடம்பெற வாய்ப்பு அதிகம்

8. டுவைன் பிராவோ: வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் . வாய்ப்பு கிடைத்தால் பேட்டிங்கில் கலக்குவார்., இல்லையென்றால் பவுலிங்கில் விக்கெட்டுகளை கழற்றுவார். சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டு.!

9. மிட்செல் சான்ட்னர்*: சுழற்பந்து வீச்சாளர். பனி தனது பங்களிப்பை அளிக்கும்போது இவரை பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்த சிஎஸ்கே முனையும்.

10. ஆடம் மில்னே: தன் வேகப்பந்து வீச்சால் லக்னோ பேட்டர்களை திணறச் செய்வார் என அணி நம்புவதால் ஆடும் லெவனில் கன்பார்ம் சீட் இவருக்கு.!

11 ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்: துஷார் தேஷ்பாண்டேவுக்கு மாற்றாக அண்டர் 19 கிரிக்கெட்டின் நட்சத்திரம் ஹங்கர்கேகரை ஆடும் லெவனில் சிஎஸ்கே கொண்டுவர வாய்ப்பு அதிகம்.

*மொயின் அலி வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் வரும் பட்சத்தில் மிட்செல் சாண்ட்னர் கழற்றிவிடப்படுவார்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

1.கே.எல். ராகுல் (கேப்டன்): ஆரஞ்சு கேப் நோக்கிய தனது பயணத்தை இன்று துவங்குவார் என எதிர்பார்க்கலாம்

2.குயின்டன் டி காக் (WK): ராகுலுக்கு நல்ல பார்ட்னர்ஷிப், பவர்பிளேவில் அதிரடியை டிகாக் வழங்குவார்

3. எவின் லூயிஸ் : நிலைபெற்று ஆடினால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்

4. மனிஷ் பாண்டே : பதற்றத்தை தவிர்த்து தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அபாயகரமான பேட்ஸ்மேன்

5. தீபக் ஹூடா : கடந்த ஆட்டத்தைப் போல இம்முறை அணி எதிர்பார்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்.

6. ஆயுஷ் படோனி: குஜராத் அணிக்கு எதிராக காட்டிய அதே அதிரடியை பேட்டிங்கில் காட்ட முயல்வார்.

7. க்ருனால் பாண்டியா: திடீரென விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ரன்களையும் குவிக்கும் மிஸ்டரி ஆல் ரவுண்டர்

8. அவேஷ் கான்: சென்ற முறையை போல இல்லாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்

9. மொஹ்சின் கான்: ரன்களை வாரி வழங்குவதை குறைத்து, விக்கெட்டுகளை வீழ்த்த முற்படுவார்.

10.ரவி பிஷ்னோய் : சிக்கனமான பவுலர் என்கிற பெயரை இந்த ஆட்டத்தில் மீட்டெடுக்க முயல்வார்

11. துஷ்மந்த சமீரா : சென்ற முறையை சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில், சிஎஸ்கேவின் ஆணி வேரையே அசைத்து விடலாம்.