டிரெண்டிங்

சென்னை மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?

சென்னை மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை?

Sinekadhara

சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணியே 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலை 10.30 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணியே 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல சுயேட்சை வேட்பாளரும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் வெளிவரத் தொடங்கியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : https://www.puthiyathalaimurai.com/tn-local-body-election-results