ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் உடன் தனது கடைசிப் போட்டியில் சென்னை மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெறாமல் சென்னை அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் கடைசிப் போட்டியில் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர்களின் பங்களிப்பினால் சென்னை அபார வெற்றிப்பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது சென்னை அணி. இந்தப் போட்டியிலும் பஞ்சாபை வெற்றிப்பெற்றால் அந்த அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறாமல் போகும்.
இந்நிலையில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி:
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி
ருதுராஜ் கெய்க்வாட்
ஷேன் வாட்சன்
அம்பத்தி ராயுடு
தோனி
ஜெகதீசன்
சாம் கரன்
ரவீந்திர ஜடேஜா
மிட்சல் சான்ட்னர்
கரன் சர்மா
தீபக் சஹார்
லுங்கி என்கிடி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச அணி
கே.எல்.ராகுல்
மந்தீப் சிங்
கிறிஸ் கெயில்
நிகோலஸ் பூரன்
கிளன் மேக்ஸ்வெல்
தீபக் ஹூடா
கிரிஸ் ஜோர்டன்
முருகன் அஸ்வின்
ரவி பிஷ்னோய்
முகமது சமி
அர்ஷ்தீப் சிங்