டிரெண்டிங்

சென்னை: பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.1.6 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

சென்னை: பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.1.6 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

kaleelrahman

சென்னையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, கடந்த 26ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதற்கான அமைக்கப்பட்ட குழுக்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் இதுவரை ஒரு கோடியே 6 லட்சத்து 52ஆயிரத்து 710 ரூபாய் ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.