டிரெண்டிங்

அதிமுக எம்.எல்.ஏ, அமைச்சர் ஆதரவாளர்களிடையே மோதல் - விழா ரத்து

அதிமுக எம்.எல்.ஏ, அமைச்சர் ஆதரவாளர்களிடையே மோதல் - விழா ரத்து

rajakannan

கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட பாலத்திற்கான அடிக்கல் ‌‌நாட்டுவிழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும், அதிமுக எம்.எல்.ஏ சந்தியா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விழா ரத்து செய்யப்பட்டது. 

மேல்கு‌மாரமங்களத்தில், தென்பெ‌ண்ணை ஆற்றின் குறுக்கே, 28 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், எம்.எல்.ஏ சந்தியா பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம் மேல்குமாரமங்களம் அமைச்சர் சம்பத்தின் சொந்த கிரா‌மம் என்பதால், அவர் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனையடுத்து அடிக்கல் நாட்டு விழா ரத்து செய்யப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.