எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு நாணயங்கள் வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, நாணயங்கள் வெளியிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதற்காக தமிழக மக்களின் சார்பிலும், தனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.