டிரெண்டிங்

டிராக்டர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படாது: திருச்சி சிவா தகவல்

டிராக்டர் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படாது: திருச்சி சிவா தகவல்

webteam

விவசாய வாகனப்பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு டிராக்டர் மாற்றப்படாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

டிராக்டரை விவசாய வாகனப்பிரிவில் இருந்து நீக்கி பொதுப்பிரிவுக்கு மாற்ற இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இவ்வாறு மாற்றுவதன் மூலம் டிராக்டருக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயரும் என்பதால், நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் டிராக்டரை பொதுப்பிரிவுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா அமைச்சர் நிதின் கட்கரியிடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து டிராக்டர் விவசாய வாகனப் பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றப்படாது என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக, திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.