டிரெண்டிங்

“தமிழர்கள் விரும்பியே இந்தி கற்கின்றனர்” -  மத்திய இணையமைச்சர் முரளிதரன்

“தமிழர்கள் விரும்பியே இந்தி கற்கின்றனர்” -  மத்திய இணையமைச்சர் முரளிதரன்

webteam

தமிழர்கள் விரும்பியே இந்தி கற்கின்றனர் என்று மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் நடைப்பெற்ற விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய இணையமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “‌இந்தி மொழியை அதிக அளவில் தமிழர்கள் தான் விரும்பி கற்கிறார்கள். ஆனால், ஊடகங்களில் தமிழர்கள் இந்தி மொழியை எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர். இந்த‌ முரண்பாட்டை புரிந்து கொள்வது சிரமமாக உள்ளது” என்று கூறினார்.

இதனியையே சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி, “தமிழர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதை‌ திமுக என்றுமே எதிர்த்ததில்லை. தமிழர்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதைத் தான் திமுக எதிர்க்கிறது” என்று விளக்கம் அளித்தார்