டிரெண்டிங்

கதவை திறந்து வைத்து தூங்கிய நபர் : செல்போன்கள், பணத்தை சுருட்டிய திருடர்கள்

கதவை திறந்து வைத்து தூங்கிய நபர் : செல்போன்கள், பணத்தை சுருட்டிய திருடர்கள்

webteam

மதுரையில் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிய நபரின் வீட்டிலிருந்த செல்போன்கள் மற்றும் பணம் திருடப்பட்டது.

மதுரை மாவட்டம் வைகை ஆற்றுப்பாலம் அருகேயுள்ள சீனிவாச பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஓட்டுனர் வீரவேல். இவர் நேற்று இரவு தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் அப்பகுதியில் உலாவந்த இரண்டு கொள்ளையர்கள், வீரவேல் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து உள்ளே புகுந்துள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த விலையுயர்ந்த 2 போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

காலையில் எழுந்து பார்த்த வீரவேல் செல்போன் மற்றும் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து வீட்டின் எதிரே இருக்கக்கூடிய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வீரவேல் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடர்களை தேடி வருகின்றனர்.