டிரெண்டிங்

ஒரு நண்பன் இருந்தால்... நில நடுக்கத்தில் சிக்கிய நண்பனை துரிதமாக காப்பாற்றிய மாணவர்!

ஒரு நண்பன் இருந்தால்... நில நடுக்கத்தில் சிக்கிய நண்பனை துரிதமாக காப்பாற்றிய மாணவர்!

JananiGovindhan

மனித நேயத்திற்கு எதிரான பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்தேறி வந்தாலும், அந்த மனிதாபிமானத்தை காக்கும் வகையிலான சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் கூடவே நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அது தொடர்பான சிசிடிவி வீடியோ ஒன்றுதான் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வீடியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பலரும் அலறியடித்து ஓடும் நிலையில் அடிபட்டு கிடந்த நண்பர் ஒருவரை தக்க சமயத்தில் ஒரு மாணவர் காப்பாற்றிய சம்பவம்தான் அதில் பதிவாகியிருக்கிறது.

வகுப்பில் உள்ள பலரும் தான் தப்பினால் போதும் என ஓடிக் கொண்டிருக்கையில் முடியாமல் இருக்கும் நண்பனை காப்பாற்ற துணிந்து தனது முதுகில் ஏற்றி அவ்விடத்தை விட்டு நகர்கிறார் அந்த மாணவர். 

இந்த வீடியோவை ஐ.பி.எஸ். அதிகாரி திபான்ஷு கப்ரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளதோடு, “கடினமான சமயங்களில் உண்மையான நட்பு ஒன்றை உடன் வைத்துக்கொள்ளவதே நல்ல வழி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்திருக்கிறார்கள்.