புதுச்சேியில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலாப்பேட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் 8 பேர் அடங்கிய குழுவினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்திருப்பதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தனது பரிந்துரையின் அடிப்படையிலேயே சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக ஆளுநர் கிரண் பேடி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழலில், சிபிஐ சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.