டிரெண்டிங்

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம் - வாட்டாள் நாகராஜ்

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம் - வாட்டாள் நாகராஜ்

rajakannan

கர்நாடகாவில் எக்காரணம் கொண்டும் ரஜினி, கமல் படங்களை திரையிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 12ம் தேதி முழு அடைப்பு நடைபெற வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், கர்நாடகாவில் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், முழு அடைப்பு போராட்டம் குறித்து மே 3இல் நடக்கும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

உச்சநீதிமன்றம் இன்றைய விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி கூறவில்லை என்று கூறிய வாட்டாள் நாகராஜ், மாநிலம் முழுவதும் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.