ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் தந்த புகாரின் பேரில் விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி சண்முகம் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி, பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கக்கூடாது. ஆனால் தமிழகத்தில் வாக்குக்கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதும், அவர்களுடைய தட்டில் வேட்பாளர்கள் பணம் வைப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் தந்த புகாரின் பேரில் அமைச்சர் சி.வி சண்முகம்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரையின்போது பணம் கொடுத்ததாகக்கூறி அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.