டிரெண்டிங்

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை

webteam

ஆர்.கே நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவர்களுடன் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த விஷால் மற்றும் ஜெ. தீபா உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இறுதி வேட்பாளர்களாக 59 பேர் ஆர்.கே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட 3 கட்சிகள் தொப்பி சின்னத்தை கோரியதால் தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது கொங்கு முன்னேற்றக்கழகம், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக்கழகம், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் தொப்பி சின்னத்தை கோரியுள்ளன. இதனால் தான் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்படவில்லை என்றும் ஆணையம் விளக்கமளித்துள்ளது.