டிரெண்டிங்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை நிறைவு

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் நிறைவடைகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள பதவியிடங்களுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பரப்புரைகள் அனைத்தும் வாக்குப்பதிவு முடிவுபெறும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை பரப்புரை நிறைவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், தேர்தல் பணிக்காக வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் வெளியேற மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.