விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(நாராயணன்)
அதன்படி விக்கிரவாண்டியில் எம்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியச் செயலாளராக முத்தமிழ்ச்செல்வன் உள்ளார். 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் முத்தமிழ்ச்செல்வன் இருந்துள்ளார். திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக நாராயணன் உள்ளார்.