டிரெண்டிங்

பெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் கைது செய்யப்பட்ட அவலம்

பெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் கைது செய்யப்பட்ட அவலம்

webteam

மானாமதுரையில் அரசு பேருந்தில் பயணித்த பெண் காவலரை டிக்கெட் எடுக்க சொன்ன ஒட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய  சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மானாமதுரை வந்த அரசு பேருந்தில் சிவகங்கையில் இருந்து  மானாமதுரை வந்த பெண் போலீசாரிடம் நடத்துனர் முருகானந்தம் டிக்கெட் எடுக்க சொல்லி உள்ளார்.  ஆனால் அரசு ஊழியர் என்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் மறுக்க  இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றவே பெண் காவலர் டிக்கெட் எடுத்தார். இதனை தொடர்ந்து பணியை முடித்து விட்டு பேருந்தை மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை யில் உள்ள பணிமனையில நிறுத்தி விட்டு அங்கு உள்ள ஒய்வு அறையில் நடத்துனர் முருகானந்தம் ஒட்டுனர் செந்தில்குமார் ஆகியோர் ஓய்வெடுக்க சென்றனர். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இருவரையும்  மானாமதுரை போலீஸார் பணிமனைக்குள் சென்று காவல்துறை அதிகாரிகள் அடித்து பிடித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.       

சம்பவத்தை அறிந்து மானாமதுரை காவல்நிலையத்துக்கு சென்ற போக்குவரத்து வரத்துத்துறை அதிகாரிகள்  போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேர்களையும்  அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் போக்குவரத்து ஊழியர்களிடம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய பெண் காவலர் மற்றும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும்காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பேருந்துகளை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில்  சிவகங்கை,திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய போக்குவரத்து பணிமனையில் இருந்து   2 மணி நேரம் தாமத்திற்கு பிறகு   பேருந்துகள் இயக்கப்பட்டன.