டிரெண்டிங்

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா

rajakannan

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து எடியூரப்பா உரிமை கோரியுள்ளார். 

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் தருவாயில் உள்ளது. தேர்தல் முடிவுகள் 90 சதவீதத்திற்கு மேல் வெளியாகியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 இடங்களில் வெற்றி பெரும் நிலையில் உள்ளது. 

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால், காங்கிரஸ், மஜத இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனக் கோரி ஆளுநரிடம் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.