டிரெண்டிங்

இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்

இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்

webteam

இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. பிறநாடுகளை ஒப்பிடும்போது இறப்பு விகிதமும் இந்தியாவில் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்கள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்களை அதிக அளவில் தாக்கும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இந்த காலகட்டத்தில் அவசியமாகிறது. பெண்களை 30 சதவிகிதம் மார்பகபுற்றுநோயே பாதிக்கிறது. பெண்களிடையே அதிகரிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கமும், மது பழக்கமும் புற்றுநோய்க்கான காரணிகளாக கூறப்படுகிறது.

மார்பகப்புற்று நோயை முன்கூட்டியே கண்டறியும் பட்சத்தில் 90 முதல் 99% குணமடையும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான மேமோகிராபி போன்ற அதிநவீன மருத்துவ வசதிகளும் குறைந்த செலவிலேயே ஒருசில மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது என்று துறை மருத்துவர்கள் கூறுகின்றனர்.