டிரெண்டிங்

கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும்: சுப்ரமணியன் சுவாமி

கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி அமைக்கும்: சுப்ரமணியன் சுவாமி

கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் 37 இடங்களை கைப்பற்றியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குமாரசாமி மற்றும் எடியூரப்பா ஆகிய இருவரும் ஆளுநரிடம் ஆட்சியமைக்க அழைப்புவிடுக்க நேரில் சந்தித்துள்ளனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி " கர்நாடக மாநில ஆளுநர் பாஜவின் எடியூரப்பாவைதான் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்ற தகவல் எனக்கு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.