அதிமுகவின் பலவீனத்தை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், அதிமுகவின் பலம், பலவீனம் குறித்தெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை என்றும், பிளவுபட்டிருக்கும் அதிமுகவினர் இணைந்தால் நல்லதுதான் என்று கூறினார்.
மேலும், பிரதமர் மோடியே, ஜெயலலிதாவை அவரது வீட்டில் வந்துதான் பார்த்தார் என்றும், மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்லவில்லை. ஆனால் அமைச்சர்கள் தற்போது டெல்லி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றார்.
இன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் தற்போது பயந்துபோய் இருக்கின்றனர் என்றும், ஜெயலலிதாவிற்கு பின், அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் பலத்தை இழந்துவிட்டது. எனவே அதிமுகவின் பலவீனத்தை பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறது என்றும் கூறினார்.