தமிழக அரசில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா முயற்சிப்பதாக பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக அரசில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்திலுள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை சார்ந்துள்ள நிலையில், அதனை காப்பாற்றாமல் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.