யாரை பிடித்தாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைப்பதாகவும், நடிகர் வடிவேலுவைக் கூட அவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் விமர்சித்துள்ளார்.
மெர்சல் விவகாரம் பற்றி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ரீதியாக மக்களிடம் பாஜக களத்தில் பதில் சொல்ல இயலாமல் தனிநபர் விமர்சனத்தில் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமல்ல உச்சநீதிமன்றம் கூட பாஜக ஆட்சியின் கைப்பாவையாக உள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் ஒருசில நடவடிக்கைகள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சுப்ரமணியசுவாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க நடிகர் வடிவேலுவைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள் என திருமாவளவன் கூறினார்.