டிரெண்டிங்

“தமிழகத்தில் இனி திமுக - பாஜக இடையேதான் போட்டி” : எல்.முருகன் சூசகம்

webteam

தமிழகத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக மாறி வருவதாகவும், அதேசமயம் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - திமுக என்ற நிலை மாறி, பாஜக - திமுக என்ற நிலை மட்டுமே தமிழகத்தில் தொடரும் எனவும், திமுகவிலிருந்து பாஜகவிற்கு ஏராளமானவர்கள் வர இருக்கிறார்கள் எனவும் பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் முருகன், பாஜக தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக மாறி வருகிறது என்றார். அதனை வெளிப்படுத்தும் விதமாகவே வி.பி.துரைசாமி அவ்வாறு கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

அத்துடன் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அவர் கூறினார். திமுக எம்.பி கனிமொழி இந்திய அளவில் பிரபலமானவர், அனைவருக்கும் அறிமுகமானவர், அவரை டெல்லி விமான நிலையத்தில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் அதுபோல விசாரித்திருக்க வாய்ப்பு இல்லை என்ற முருகன், அரசியல் செய்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை கனிமொழி பதிவிட்டுள்ளதாக கூறினார். மேலும், இ.பாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.