டிரெண்டிங்

சாம்ராஜ்யம் சரிவதை பாஜக வாக்கு சதவிதம் காட்டுகிறது: மார்க்சிஸ்ட்

சாம்ராஜ்யம் சரிவதை பாஜக வாக்கு சதவிதம் காட்டுகிறது: மார்க்சிஸ்ட்

webteam

சாம்ராஜ்யம் சரிவதை பாஜக வாக்கு சதவிதம் காட்டுகிறது: மார்க்சிஸ்ட்

குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றாலும் எண்ணிக்கையில் பார்க்கும்போது அவர்களது சாம்ராஜ்யம் சரிந்து வருவதையே காட்டுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தில் நடந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 150 இடங்களில் வெற்றிப்பெறுவோம் என மோடி கூறினார். கடந்த தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது 99 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. இது பாஜகவின் சாம்ராஜ்யம் சரிந்து வருவதை காட்டுகிறது என்றார்.

ஆர்.கே. நகரில் கடந்த மூன்று தினங்களாக பணமழை பொழிகிறது. மதுசூதனனுக்கு போலிஸ் உதவியுடன் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் தோற்று விட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.