டிரெண்டிங்

திருமாவளவனை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

திருமாவளவனை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

webteam

திருமாவளவனை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்துக் கோயில்களை இடித்து இஸ்லாமிய மசூதிகள் கட்டப்பட்டது என்று கூறுகிறார்கள். அப்படி பார்த்தால் பல பெளத்த கோயில்களை இடித்துதான் இந்து கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே அதற்காக இந்து கோயில்களை நாம் இடிக்க முடியுமா? என பொருள்பட பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வலையில் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் “ இந்து கோயில்களை இடிக்க முன்பு தன் ஜாதி ஆண்களைத் தவிர பிற சமூக ஆண்கள் ஆண்மை அற்றவர்கள். எனவே மற்ற சமுதாய பெண்கள் இவர் ஜாதி ஆண்களைத் தேடிவருகின்றனர் என்று அசிங்கப்படுத்திய திருமாவளவன், இன்று திக, ஜிகாதி கும்பலுடன் சேர்ந்து இந்து கோவில்களை இடிக்கப் சொல்லுகிறார். இவரது கூட்டணி திமுகவை ஆர்.கே.நகரில் புறக்கணிப்போம்” என கூறியிருந்தார். 
ஆனால் அவ்வாறு நான் கூறவில்லை. என் பேச்சு முன்னுக்கும் பின்னுக்குமாக திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று திருமாவளவன் மறுத்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் திருமாவளவன் பேச்சை கண்டித்து டிச.11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை அறிவித்திருக்கிறார்.