டிரெண்டிங்

பாஜகவுடன் மன வருத்தத்தில் உள்ளேன் ; கட்சி மாறப் போவதில்லை - நயினார் நாகேந்திரன்

பாஜகவுடன் மன வருத்தத்தில் உள்ளேன் ; கட்சி மாறப் போவதில்லை - நயினார் நாகேந்திரன்

webteam

பாஜகவுடன் மன வருத்தத்தில் இருப்பதாக அக்கட்சியின் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “தலைமை மீது வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால் கட்சி மாறப்போகிறேன் என்று வெளியாகும் செய்தி உண்மையில்லை. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது. நம்பிக்கையோடு பாஜகவிற்கு வந்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருப்பது அவசியம். அனுபவமிக்க தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகி செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.