டிரெண்டிங்

நாடு முழுவதும் 300 இடங்களில் பாஜக முன்னிலை

நாடு முழுவதும் 300 இடங்களில் பாஜக முன்னிலை

மக்களவை தேர்தலில் 310 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. 

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இதில் பாஜக 306 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 103 இடங்களிலும் மற்றவை 95 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.