டிரெண்டிங்

கீழடி குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்: தமிழிசை கண்டனம்

webteam

கீழடி ஆய்வு குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிவரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமா, சுபவீ, ராமதாஸ் ஆகியோரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை எந்த விதத்திலும் மத்திய அரசு குறைக்கவோ மறைக்கவோ இல்லை என்பதுதான் உண்மை. அங்கே நடந்த இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் நேரடியாகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவும் அப்போதைய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேரில் ஆய்வு செய்து 3ஆம் கட்ட பணிகளுக்கான நிதிகளையும் அளித்து ஆய்வு பணிகள் நிறுத்தப்படாது என உறுதியளித்தனர். அவர்கள் உறுதியளித்தப்படி 3ஆம் கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த உண்மையை மறைத்து தமிழ் கலாச்சாரத்திற்கு மத்திய அரசு எதிராக செயல்படுகிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பொய்யர்கள் சிலர் எல்லாம் காலியாவதாக புலம்பித் திரிவதை நினைத்தால் பரிதாபமாக இருகிறது. அது அவர்களின் பார்வை கோளாறே தவிர மத்திய அரசின் கோளாறு இல்லை என்று கூறியுள்ளார்.