டிரெண்டிங்

மாற்றுக் கட்சியிலிருந்து யாரெல்லாம் வருவார்கள் என்பதை பாருங்கள்: எல்.முருகன்

kaleelrahman

பாஜகவின் வீடுதோறும் வேல்பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் ஒலிக்கும் நிகழ்வு தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.


தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள அவருடைய இல்லத்தில் முருக வேலுக்கு பூஜை செய்தார் அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய எல்.முருகன்.


அனைத்து தரப்பு மக்களின் வீடுகளில் வேல் பூஜை நடத்த திட்டமிடப்பட்டு, உலகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கறுப்பர் கூட்டம் சம்மந்தப் பட்டவர்களை அரசு கைது செய்துள்ளது வரவேற்கத் தக்கது. ஆனால் கறுப்பர் கூட்டத்திற்கு பின்னால் உள்ளவர்களையும் விசாரிக்க வேண்டும். கறுப்பர் கூட்டத்தை திமுக தலைவர் இன்று வரை கண்டிக்கவில்லை. அவரின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்

மேலும் மத்திய அரசின் செயல்பாடு, மற்றும் மோடியின் ஆட்சியில் கவர்ந்து பஜகவிற்கு அவர்களாகவே முன்வந்து சேர்கிறார்கள்.
மாற்றுக் கட்சியில் இருந்து யார் யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பாஜகவை நோக்கி பல்வேறு தரப்பில் இருந்தும் பலர் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். பாஜகவிற்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம். வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை சேந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக நிச்சயமாக இருப்பார்கள். தற்போது இருக்கும் கூட்டணியே எதிர்வரும் தேர்தலிலும் தொடரும். இப்போதும் தொடர்கிறது எப்போதும் தொடரும் என்றார் எல்.முருகன்.