டிரெண்டிங்

ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்கிறது பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால்

ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்கிறது பாஜக: அரவிந்த் கெஜ்ரிவால்

webteam

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக, ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மூலம் ஆட்சியை நடத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறந்தள்ளி, அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக ஆளுநர் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

ஆளுநரின் ஆய்வுகளை மாவட்ட அரசு அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டிருந்த ட்வீட்டையும் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.