கர்நாடகாவில் பரிவர்த்தன் யாத்ரா என்ற பெயரில் 75 நாள் யாத்திரையை பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா நவம்பர் 2ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. பாரதிய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடியூரப்பா தலைமையில் 224 தொகுதிகளில் இந்த யாத்திரை நடக்க உள்ளது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் தவறுகளை இந்த யாத்திரை மக்களிடத்தில் கொண்டு செல்லும் என கர்நாடக பாரதிய ஜனதா பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.