டிரெண்டிங்

‘இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துகின்றன'-ராகுல் காந்தி

‘இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ், ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துகின்றன'-ராகுல் காந்தி

EllusamyKarthik

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மாதிரியான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்தி வருகின்றன. அதன் மூலம் போலி செய்திகளையும், வெறுப்புணர்வையும் வாக்காளர்களிடம் பரப்பி வருகின்றனர்.  

இறுதியாக இது தொடர்பான உண்மையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி ஊடாக வெளிப்படுத்தியுள்ளன’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.