டிரெண்டிங்

ஹிமாச்சலை ஊழலில் இருந்து விடுவிக்க வேண்டும்

ஹிமாச்சலை ஊழலில் இருந்து விடுவிக்க வேண்டும்

webteam

ஹிமாச்சல் பிரதேசத்தை ஊழல் இல்லாத மாநிலமாக உருவாக்கப் போகிறோம் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற நவம்பர் 2ம் தேதி ஹிமாச்சல் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த மாதம் 9ம் தேதி அங்கே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பாஜக டெவலப்மெண்ட் அரசியலில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் ஹிமாச்சல் மாநிலத்தை ஊழல் இல்லாத மாநிலமாக முன்னேற்ற போகிறோம். மேலும் அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி மாநிலத்தை முன்னேற்ற போகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.