kids playing
kids playing @KuchrooAayushi/Twitter
டிரெண்டிங்

“எது வாங்கினாலும் ரூ.15 தான்! ஆனா...” - 90’s நாஸ்டாலஜி விளையாட்டை கையிலெடுத்த 2K கிட்ஸ்!

Janani Govindhan

இன்டெர்நெட் உலகுக்கு தீனி போடுவதில் பெங்களூருவாசிகளுக்கு நிகர் எவருமே இருப்பதில்லை என்பது போல நித்தமும் நிகழும் சாதாரண நிகழ்வை கூட Peak Bengaluru மொமன்ட்டாக மாற்றி இணையத்தில் வைரலாக்கவிடுகின்றனர் மெங்களூருவாசிகள். இதனால் இந்தியாவின் பிரதான டெக் சிட்டி என்ற பெயருக்கு அடுத்ததாக ‘வைரல் சிட்டி’ என்ற பெயரையும் இணையத்தில் பெற்றிருக்கிறது பெங்களூரு!

இதுவொருபக்கம் என்றால், இந்த ஐ.டி. நகரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாதவர்கள் எவ்வளவு பேர் என கணக்கெடுத்தால் வெகு சிலரே இருப்பார்கள். அந்தளவுக்கு அங்கு வளர்ந்துள்ளது டெக்னாலஜி!

இப்படியாக இணையத்தால் சூழ்ந்திருக்கும் நகரத்தில் இருப்பதாலோ என்னவோ... படிக்கும் நேரம் போக எஞ்சிய சமயங்களில் வீடியோ கேம் விளையாடியே பொழுதை கழிக்கும் இளைய சமுதாயம் வேகவேகமாக அங்கு வளர்ந்து வருகிறது. அதனாலேயே என்னவோ, பெங்களூருவில் யாரோ ஒரு சிறுவன்/சிறுமி சற்று பின்னோக்கி யோசித்து, 90’ஸ் விளையாட்டை விளையாண்டால் அதுகூட ஆச்சரியமளிக்கும் விஷயமாக தெரிகிறது இணையவாசிகளுக்கு(!)

அந்தவகையில் பெங்களூருவின் இந்திரா நகர் பகுதியில், சமகால பழக்கத்தில் அங்கு இல்லாத ஒரு விளையாட்டில் மூழ்கியுள்ளனர் மூன்று சிறார்கள். அதனாலேயே இது அவர்களுக்கு நாஸ்டாலஜியாக மாறியுள்ளது. அப்படியான இது இணையவாசிகளையும் (நம்மையும் சேர்த்துதான்!) வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சம்பவத்தின்படி, வீட்டிற்குள்ளேயே கேம் விளையாடி பொழுதை கழிக்க விரும்பாத மூன்று சிறுவர்களும், வீட்டு வாசலில் லெமன் ஜூஸ் கடை போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி, வித்தியாசமான விலைப்பட்டியலை வைத்து தயார் செய்து, ‘Sale' அறிவித்து விளையாடியிருக்கிறார்கள். இதனை அவ்வழியே சென்ற பெண்ணொருவர், ஃபோட்டோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஆயுஷி என்ற அப்பெண்ணின் ட்விட்டர் பதிவில், “இந்திரா நகரில் இந்த டம்டம் சத்தத்தை கேட்கும் நேரம் கிடைத்தது. அங்கு இந்த சிறுவர்கள் ஜூஸ் கடை போல ஒன்றை, விளையாட்டுத்தனமாக ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். ஒரு கலையை இவர்கள் கற்றுக்கொள்ள சிறந்த வழி மற்றும் சரியான வயது இதுதான்!” எனக் குறிப்பிட்டு நம்ம பெங்களூரு மற்றும் பீக் பெங்களூரு ஆகிய பக்கங்களையும் டேக் செய்திருந்தார்.

ஆயுஷி பகிர்ந்த அந்த ஃபோட்டோவில், அவர் கேப்ஷனின் வழியே அச்சிறுவர்கள் எல்லா வகை லெமன் ஜூஸுக்கும் ரூ.15 என விலை நிர்ணயித்து அதற்கு தள்ளுபடியாக 5 ரூபாயையும் அறிவித்து விளையாடியது நமக்கு தெரியவருகிறது.

இதனைக் கண்ட இணையவாசிகள் பலரும் ‘எப்படி ஒரு பொருளை விற்க வேண்டும் என்பதில் பிள்ளைகள் படு கில்லாடியாக இருக்கிறார்கள் என்பது இதன்வழியே தெரிகிறது’ என கமென்ட் செய்திருக்கிறார்கள். இந்த பதிவை கண்ட சிலர் தங்களுடைய குழந்தைப்பருவ நினைவலைகளையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

தற்போது இவையாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது!