டிரெண்டிங்

"இப்படியொரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் பரவாயில்லை"-ரோகித் சர்மா !

"இப்படியொரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை; ஆனாலும் பரவாயில்லை"-ரோகித் சர்மா !

jagadeesh

ஹைதராபாத் அணிக்கு எதிராக இப்படியொரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆஃப்க்கு தகுதிப் பெற்றது ஹைதராபாத். இந்தப் போட்டிக்கு பின்பு ரோதிச் சர்மா பேசினார் அப்போது "இப்படியொரு தோல்வியை எதிர்பார்க்கவில்லை. இந்த சீசனில் எங்களுடைய மோசமான போட்டி இதுவாகத்தான் இருக்கும். இதுபோன்ற ஆட்டத்திறனை இனிமேலும் வெளிப்படுத்தக் கூடாது. இதனை அப்படியே விட்டுவிட வேண்டும்" என்றார்.

மேலும் "ஆனாலும் பரவாயில்லை. பிளே ஆஃப்க்கு செல்லும் முன் அணியில் சில மாறுதல்கள், வியூகங்களை ஹைதராபாத் அணிக்கு எதிராக பரிசோதித்து பார்த்தோம். ஆனால் அது இந்தப் போட்டியில் கைகொடுக்கவில்லை. ஆனால் இது ஒரு நல்ல படிப்பினையும் கூட. எங்களுடைய முழு பலம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளதான் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் இதுபோன்ற தோல்வி இனி வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்" என்றார் ரோகித் சர்மா.

தொடர்ந்து பேசிய அவர் "பும்ரா, போல்ட் ஆகியோர் மிகச்சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். அவர்கள் அணிக்கு மிகப்பெரிய பலம். எப்போது விக்கெட் வேண்டுமோ அப்போதெல்லாம் இவர்கள் அசத்திவிடுவார்கள். தொடர்ந்து விளையாடுவதால் அவர்களுக்கு  ஓய்வு கொடுத்தோம். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பயணமும் செய்ய வேண்டும். இந்த ஓய்வு அவர்களுக்கு அடுத்ததடுத்து போட்டிகளுக்கு தயாராக வாய்ப்பாக அமையும்" என்றார் ரோகித் சர்மா.