டிரெண்டிங்

கோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.

webteam

கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ள நிலையில், வெளியே செல்வதை பலரும் விரும்புவதில்லை. எப்போதும் ஏசி அறைக்குள் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் வேலைக்கு செல்லும் பலருக்கு வேறு வழியில்லை. வெயிலை சமாளித்தே ஆக வேண்டியவர் நீங்கள் என்றால் இவற்றை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

சன் ஸ்கிரீன் 

உங்கள் முகத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீன் கண்டிப்பாக உங்களது கைப்பையில் இருக்க வேண்டும். இல்லையென்றாம் வெயிலில் உங்கள் முகம் ஈரப்பதத்தை இழந்து விடும். வீட்டை விட்டு வெளியே கிளம்புவதற்கு 30 நிமிடம் முன்பு இதனை முகத்தில் போட்டுக் கொள்வது முக்கியம்.

ஹேர் மாஸ்க் ( முடியை மறைக்கும் துணி)

இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் பெரும்பாலும் தலையோடு சேர்ந்த்து முகத்தையும் மூடிக் கொண்டு செல்வார்கள். ஆனால் மற்றவர்கள் யாரும் பெரிய அளவில் தலை முடியை மறைப்பதில்லை. அதிக சூரிய வெளிச்சம் பட்டால் முடி உதிர வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக இது நடக்கும். எனவே தலையை மூடும் வகையில் துணியையோ, தொப்பி அணியலாம்.

ஹேர் ஸ்பிரே

தலை முடியை வெயிலில் இருந்து பாதுகாப்பதோடு வறண்டு போகாமால் பார்த்துக் கொள்ள ஹேர்ஸ்பிரே பயன்படுத்தலாம். பெண்கள் இதனை பயன்படுத்தலாம். பளபளப்பாகவும், ப்ரெஸ்ஸாகவும் முடியை வைத்துக் கொள்ள ஹேர் ஸ்பிரே உதவும்.

பேஸ் வாஷ்

வெளியே சென்று வந்தால் முகம் கழுவ வேண்டும் என்று சொல்வார்கள். முகத்தை வறட்சி இன்றி வைத்துக் கொள்ள உதவும். வெயிலில் சென்று வந்தால் , பேஸ் வாஷ் வைத்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்

லிப் பார்ம் 

வெயிலில் முகம் எப்படி வறண்டு போகுமோ அதே போல் எளிதில் வறண்டு விடும் பகுதி உதடு. இதனால் உதட்டில் வெடிப்பு கூட ஏற்படலாம். இதனை தடுக்க ஒரே வழி லிப் பார்ம் என்று சொல்லக் கூடிய உதட்டு பூச்சுகள். இதனையும் வெயில் காலங்களில் உடன் வைத்திருப்பது நல்லது.