ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கொரோனா தடுப்புப்பணியில் பிரதமரே பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் செயல்படுவது இந்த நல்லாட்சிக்கு எடுத்துகாட்டாக உள்ளது” என்று தெரிவித்தார்
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே மோதலா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பது மட்டும் தான் என் கருத்து” என்று தெரிவித்தார்