டிரெண்டிங்

“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல்

“அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள்” - பாக்யராஜ் மறைமுக சாடல்

webteam

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றிருக்கும் நிலையில், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே.சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், அரசியலில் ஒரே இரவில் முன்னுக்கு வந்துவிடுகிறார்கள் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “

சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால் அரசியலில் அப்படியில்லை. ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்” என விமர்சனம் செய்துள்ளார்.