டிரெண்டிங்

ஆள் இல்ல.. இனி ஆட்டோமேட்டிக்; தேனியில் வந்த டிராபிக் சிக்னல்

kaleelrahman

தேனியில் நவீன முறையில் இயங்கக் கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல் மின்கம்பங்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி துவக்கி வைத்தார்.


தேனி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு வழிமுறைகளை கையாண்ட போதிலும் அதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைக்கும் விதமாக சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் தானியங்கி முறையில் இயங்கக் கூடிய போக்குவரத்து சிக்னல் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்கள் முழுவதும் இருபுறமும் ஒளிரும் பட்டைகளால் அமைக்கப்பட்டுள்ளன. 


இதில் உள்ள மஞசள், பச்சை, சிவப்பு, ஆகிய நிறங்கள் அனைத்து பகுதிகளில் இருந்து வரும் ஓட்டுநர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் மதிப்பிலான இந்த போக்குவரத்து சிக்னல் மின்கம்பங்கள் தேனி நகரில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.


இதை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி துவக்கி வைத்தார். இந்த ஒளிரும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதன் மூலமாக விபத்துகள் குறையும் என்றும், வாகன ஒட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல் கடைபிடிப்பார்கள் எனவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.