டிரெண்டிங்

என் மகளை டேட் செய்யனும்னா... 5 ரூல்ஸ்களை முன்வைத்த ஆஸி., அம்மா - வைரல் வீடியோ!

JananiGovindhan

சமூக வலைதளங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் அதில் பல்வேறு நன்மைகளும் தீமைகளும் ஒருசேர கலந்துதான் இருக்கின்றன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால் பெரும்பாலானோர் பொழுதை கழிக்கவும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டவுமே சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சமயங்களில் பதிவிடப்படும் சில வேடிக்கையான பதிவுகள் பலவும் இணையவாசிகளின் கவனத்தை பெற்று அவர்களை கவருவதையும் தவறாது. அந்த வகையில் டிக் டாக் தளத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 19 வயது மகளுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆண்களுக்கு ஐந்து நிபந்தனைகளை விதித்து வீடியோ வெளியிட்டுள்ளது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

முதல் நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பலரும் அந்த பெண்ணின் ஐந்தாவது நிபந்தனைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதன்படி Kat Clarke என்ற டிக்டாக் பயனர் பகிர்ந்த வீடியோவில் என்னென்ன நிபந்தனைகளை விதித்திருந்தார் என்பதை காணலாம்.

1) என் மகள் டேட்டிங் செய்ய தயாராகவே இருக்கிறாள். ஆனால் என் மகளுக்கு நல்லவையே நடக்க வேண்டும். மற்றவர்களுக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்பதும் அவளது நம்பிக்கை.

2) எனக்கும் என் மகளுக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாள். அவளுடைய முன்னாள் காதலர் எங்களுடைய பிறந்த நாளன்று எங்கள் இருவருக்கும் சேர்ந்தே பரிசுகளை வழங்குவார். ஆகையால் எனக்கும் என் மகளுக்கும் இந்த விஷயத்தில் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

3) முதல் ஆறு மாதங்களுக்குள் உங்கள் டேட்டிங் வாழ்க்கை தீவிரமாக இருக்கும் வரையில் உடல் ரீதியான எந்த உறவும் இருக்கக் கூடாது.

4) உங்களுடைய டேட்டிங் வாழ்க்கை எந்த அளவில் இருந்தாலும் சரி; ஒருபோதும் கிறிஸ்துமஸ் தடைபட்டு விடக்கூடாது. மேலும் இப்போது என்ன செய்வதென்று என் மகளும் என்னிடம் வந்து கேட்ககூடாத வகையில் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

5) என் மகளை டின்னர் சாப்பிட வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அப்படியே அழைத்துச் சென்றாலும் அவள் சாப்பிட்டதற்கு பில் கட்டச் சொல்லவும் கூடாது.

இவ்வாறு ஐந்த நிபந்ததனைகளை அடுக்கியிருக்கிறார் கேட் க்ளார்க். கேட்-ன் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்ட நெட்டிசன்களின் பெரும்பாலானோர் ஐந்தாவது நிபந்தனையை அறிந்ததும் பொங்கி எழுந்துவிட்டார்கள். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என எல்லாருமே சமமாக சம்பாதிப்பதால் ஐந்தாவது கண்டிஷனுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

டிக்டாக்கில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருக்கும் கேட் க்ளார்க்கின் இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள்.