டிரெண்டிங்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேன் மீது தாக்குதல்

Rasus

விழுப்புரம் அருகே மக்களவை தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் பிரசார வேன் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொடர்ச்சியாக விழுப்புரம் பகுதியில் வாக்குச் சேகரித்து வருகிறார். நேற்றிரவு விழுப்புரம் கோலியனூர் அருகே வாக்குகேட்டு சென்றபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை மறித்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் வாகனத்தில் வந்த விடுதலைச் சிறுத்தை கட்சியை சார்ந்த செந்தமிழ் என்பவர் காயம் அடைந்தார். பின்னர் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பில் இருக்கின்ற போதே ரவிக்குமார் வாகனத்தின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.