டிரெண்டிங்

அப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....!

அப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....!

webteam

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் உள்ள சில ஒற்றுமைகள்.

கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற பாஜக, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி வரும் 23 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகியதில் எடியூரப்பாவுக்கும் முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய்க்கும் சில ஒற்றுமைகள் உள்ளது.

ஆம் பாஜகாவைச் சேர்ந்த அட்டல் பிகாரி வாஜ்பாய் 22 ஆண்டுகளுக்கு முன்பு 1996ம் ஆண்டு மே 16 முதல் ஜூன் 1 வரை (16 நாட்கள்) இந்திய பிரதமராக பணியில் இருந்தார். அப்போது பிரதமராக இருந்து பெரும்பான்மை கிடைக்காது என்பதால் வாஜ்பாய் பதவி விலகினார். வாஜ்பாய் பதவி விலக நேர்ந்தபோது, அடுத்த பிரதமராக காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமியின் தந்தை தேவகவுடா பிரதமராக பொறுப்பேற்றார். அதேபோல, இப்போது கர்நாடகா முதல்வராக 3 நாட்களில் எடியூரப்பா பதவி விலகியுள்ளார். இந்நிலையில் எடியூரப்பா பதவி விலகியதும் கர்நாடகா முதல்வராக அதே காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இருவரும் (வாஜ்பாயும்-எடியூரப்பாவும்) ராஜினாமா செய்த பின் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலா அழைத்துப் பேசினார். புதிய அரசை அமைக்குமாறு அப்போது ஆளுநர் கேட்டு கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி வரும் 23ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறினார். பதவியேற்றதில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனிய காந்தி, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் குமாரசாமி தெரிவித்தார். குமாரசாமிக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மாயாவதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நாளை ராஜிவ் காந்தியின் நினைவு தினம் என்பதால், சோனியா, ராகுல் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, 23ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.