டிரெண்டிங்

”சட்டமன்றம் முடக்கப்படுமா?; எடப்பாடியின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” - உதயநிதி

kaleelrahman

சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

பொள்ளாச்சி நகர் மன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்

அப்போது பொதுமக்கள் மத்தியில் உதயநிதி பேசியபோது, “முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தை முடக்க போவதாக கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி போல பஜகவிற்கு அடிமையாக இருந்தும் கூவத்தூர் சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக வரவில்லை நாங்கள் மக்களை சந்தித்து மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம்.

எடப்பாடியின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. ஏராளமான வாக்குறுதிகளை அளித்து விட்டு என்னை காணவில்லை என்று எடப்பாடி கூறுகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றும் கூட்டத்தில் அவருக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தேன் தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை பற்றி பாராளுமன்றத்தில் தமிழகத்தை பார்த்து திருந்துங்கள் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தெரிவித்த உதயநிதி மகளிருக்கு அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் கோவை மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளதாக கூறி வரும் அதிமுகவினருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.