டிரெண்டிங்

தற்போதைய சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால்.. அரசு கவிழுமா?

தற்போதைய சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால்.. அரசு கவிழுமா?

webteam

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையின் தற்போதைய நிலையை பார்ப்போம்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 இடங்களில், அதிமுகவுக்கு 136 உறுப்பினர்கள் இருந்தனர். ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ள நிலையில், 135 இடங்களை அதிமுக கொண்டிருந்தது. சபாநாயகரைத் தவிர்த்தால் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 134 ஆகும். 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116. அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க, அவையின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கு மேல் ஒரு இடம் இருக்க வேண்டும். தற்போதைய அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 215 என்ற நிலையில், பெரும்பான்மைக்கு 108 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.