டிரெண்டிங்

சென்னை மாநகராட்சி வார்டுகள்: முன்னிலை நிலவரம் இங்கே

சென்னை மாநகராட்சி வார்டுகள்: முன்னிலை நிலவரம் இங்கே

JustinDurai

மதியம் 12 மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், திமுக 50 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 12 மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில், திமுக கூட்டணி 52 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 2 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை முழுமையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022