டிரெண்டிங்

சமபலத்தில் திமுக, அதிமுக: சுயேச்சைகள் கண்ணசைவில் மணப்பாறை நகராட்சி

சமபலத்தில் திமுக, அதிமுக: சுயேச்சைகள் கண்ணசைவில் மணப்பாறை நகராட்சி

JustinDurai

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவும், திமுகவும் சமமான இடங்களை பெற்றுள்ளதால், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்ற போட்டி நிலவுகிறது.

27 வார்டுகள் கொண்ட மணப்பாறை நகராட்சியில், அதிமுக 11 இடங்களிலும், திமுக கூட்டணிக் கட்சிகள் 11இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐந்து பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் ஐந்து பேரும் திமுகவில் விருப்பு மனு கொடுத்து, சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

தற்போது சரி சமமான அளவில் அதிமுகவும், திமுகவும் இடங்களை பெற்றுள்ளதால், சுயேச்சையாக வெற்றி பெற்ற ஐந்து பேரின் ஆதரவுடன் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. சுயேச்சையாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள், அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதையும் படிக்க: "தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி நாங்கள்தான்”- உரிமை கொண்டாடும் காங்கிரஸ், பாஜக