விழுப்புரம் அடுத்த காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலராக பணியாற்றுபவர் ஏழுமலை (25). இவர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் அறையில் 7.62 mm போல்ட் ஆக்சன் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர தினமான நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் நுழைவுவாயில் பணியில் இருந்துவிட்டு நேற்றிரவு தான் அறைக்கு வந்துள்ளார். துப்பாக்கியை ஒப்படைக்காமல் ரூமில் வந்து தங்கியுள்ளார். இதனிடையே காலையில் 10 மணி வரை அறை திறக்காததால் ஜன்னலை உடைத்து பார்க்கும்போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி ராதாகிருஷ்ணன் டிஐஜி எழிலரசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட காவலர் ஏழுமலை ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் பணிக்கு வந்தவர், அதனால் இவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.